Friday, June 8, 2012

கூகிள் விற்பனைக்கு வருகிறது..


உலகிலே முதலாவது தேடுதளமான கூகுள் விற்பனைக்கு வந்தால் அதனை வாங்கக் கூடிய தகுதிகள் உள்ள இணையத்தளங்கள் எத்தனையாக இருக்கும் என்று நினைத்தபோது எனது மனதில் உதித்த சில இணையத்தளங்களின் தொகுப்பு..

1. பேஸ்புக் - உலகில் இப்போதைய தலைசிறந்த இணையத்தளங்களுள் ஒன்றான பேஸ்புக் இணையத்தளம் இதுவே கூகிளின் பயனாளர்கட்கு நிகரான பயனாளர்களைக் கொண்டிருக்கிறது..



2. எம்.எஸ்.என். - கூகிளைப்போன்ற ஒரு தேடுதளம்.. இதுவும் கிட்டத்தட்ட கூகிளினை வாங்கக் கூடிய அளவு பணபலம் கொண்டது. இது மைக்கிரோசொப்ர் நிறுவனத்தினால் நடத்தப்படுகிறபடியினால் இது மிகுந்த பணபலம் கொண்டதாக இருக்கிறது..


3. யாகூ - கூகிளுடன் போட்டிபோடுகின்ற வலைத்தளங்களில் யாகூவே முதலிடத்தைப் பிடிக்கிறது. அதனால் இதனையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இது பலவிதமான சேவைகளையும் தன்னுடனே கொண்டுள்ளது இதனால் இது மக்கள்மத்தியில் கூகிளிற்கு அடுத்ததென பெயர்பெற்றுள்ளது..

4. விக்கிப்பீடியா - இது ஓப்பின் என்சைக்கிலோப்பீடியாவாக இருப்பதனால் இதுவும் மிக முக்கியமான வலைத்தளங்கள் என்ற பட்டியலில் ஒன்றாக இருக்கிறது.. இதுவும் சில வேளைகளில் கூகிளினை வாங்கலாம். இந்த என்சைக்கிலோப்பீடியா பல மொழிகளிலும் இருப்பதுவும் இதற்கு ஒரு பிளஸ் பொய்ன்ட்..


மற்றுப்படி கூகிளை யாரும் விற்பதாகவும் இல்லை.. தலைப்பைப் பார்த்ததும் கிளிக் செய்து பார்த்த உங்களுக்கு சிறிது ஏமாற்றம் தான்..(மன்னிப்போம் மறப்போம்)
அப்படியே பேஸ்புக்க் லைக் பட்டினையும் கிளிக் செய்து விடுங்கள்..
கூகிளையாவது விற்பதாவது...

Wednesday, June 6, 2012

பேனா...




உன்னிடம் சொல்லத்தான் 
ஆசை ஆனாலும் 
பயமாக இருக்கிறது
என்னுடன் பேசாமல் 
விட்டுவிடுவாயோ?? 
என்று யோசிக்கின்றேன் 
என்றாவது உனக்கு 
அது தெரியவரும் 
அப்போது சொன்னால் 
எந்தப் பிரயோசனமும் 
இல்லை என்பது
 உண்மைதான்
கண்ணே எனில்க் 
கோவம் கொள்ளாதே
சொல்கிறேன் உன்னிடம் 
தவறாய் இருந்தால் 
மன்னித்துவிடு
இது வரை இவ்வாறு 
யோசித்ததுகூட இல்லை 
நேற்றுத்தான் இவ்வாறு 
நடந்து விட்டது
சொல்கிறேன்
நீ தந்த பேனாவை எங்கோ தொலைத்துவிட்டேன்...

புயலாக...



சிறுகாற்றாய் நீ வந்தாய்
ஏனோ 
என்மனதில் ஓர் புயல்...
என் இதயக் கோட்டை...
சரிந்தது..
என் மனமெல்லாம் 
புண்ணானது..
மீண்டும்
உன் கண்களைக் 
கண்டதும்என் இருதயம்
புதிதானது....
இது தான் அகராதியில்
காதல் என 
அச்சடிக்கப்பட்டதோ??